சிவகிரி: சிவகிரி நவசக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று (1ம் தேதி) நடக்கிறது.சிவகிரி மேற்கே பெரும்பாதையில் சாந்தி பிரிக்ஸ் நிறுவனத்தால் புதியதாக நவசக்தி விநாயகர் கோயில் கட்டிமுடிக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த 27ம் தேதி யாகசாலை அமைக்கப்பட்டு மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து இருநாட்கள் காலை, மாலை பூஜைகள் நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான இன்று (1ம்தேதி) காலை 6 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாபிசந்தானம், ஸ்பர்சாகுதி, திரவ்யாகுதி, யாத்ராதனம், மகாபூர்ணாகுதி, பூஜை, தீபாராதனைகள் நடைபெறுகிறது.காலை 7.15 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு 7.45 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம் நடைபறுகிறது. தொடர்ந்து நவசக்தி விநாயகருக்கு 18 வகையான நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் மகாதீபாராதனை நடைபெறுகிறது. ராஜ சரவணமாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. கோயில் கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளை சாந்தி பிரிக்ஸ் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் செய்துள்ளனர்.