பதிவு செய்த நாள்
06
மார்
2013
10:03
ஈரோடு: ஈரோடு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடக்கிறது. நேற்று அதிகாலை முதலே குண்டம் இறங்கும் பக்தர்கள், கோவிலின் முன் காத்துக் கிடந்தனர்.ஈரோடு கள்ளுக்கடைமேட்டில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் இயங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். குண்டம் திருவிழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்குவது வழக்கம்.இந்தாண்டு காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, ஃபிப்ரவரி, 18ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 25ம் தேதி இரவு கொடியேற்றம் நடந்தது.தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. நேற்று இரவு, 7 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நடந்தது. நேற்று அதிகாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள், தங்களின் வேண்டுதலுக்கு ஏற்ப குண்டத்துக்கு தேவையான மரக்கட்டைகளை காணிக்கையாக வழங்கினர்.குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நேற்று நடந்தது. குண்டம் இறங்கும் பக்தர்கள் காத்திருக்கவும், வரிசையாக குண்டம் இறங்கவும் ஏதுவாக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று அதிகாலை முதலே, ஆயிரம் பக்தர்களுக்கு மேல் குண்டம் இறங்க வரிசையில் காத்திருந்தனர்.இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:இந்த ஆண்டு கள்ளுக்கடைமேடு காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவுக்கு ஒரு நாள் முன்பே, குண்டம் இறங்கும் பக்தர்கள் கோவில் முன் குவிந்தனர்.குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு, பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றில் பக்தர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர். நாளை (இன்று) நடக்கும் குண்டம் விழாவில், ,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர், என்றனர்.