ராசிபுரம்: ராசிபுரம் நித்ய சுமங்கலி மாரியம்மன் ஸ்வாமிக்கு வரும், 11ம் தேதி காய்கனி அலங்கார உற்சவம் நடக்கிறது.ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மாசி அமாவாசையை முன்னிட்டு, ஸ்வாமிக்கு பலவேறு கனி மற்றும் காய் அலங்காரம் செய்யப்படும்.உலக அமைதி வேண்டி, இந்த சிறப்பு உற்சவ பூஜை நடக்கிறது. இந்த அலங்காரத்திற்கு தேவையான காய், கனி வகைகளை கோவில் நிர்வாகத்தினரிடம், பக்தர்கள் வழங்கலாம்.