திருநெல்வேலி: பாளை., தியாகராஜநகர் விக்ன விநாயகர் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு இன்று (6ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது.விக்ன விநாயகர் கோயிலில் கடந்த ஜனவரி 23ம் தேதி மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜை நிறைவு விழா இன்று நடக்கிறது.இதையொட்டி நேற்று மாலை கோயிலில் தூத்துக்குடி தர்மலிங்கம் குழுவின் சிறப்பு நாதஸ்வர கச்சேரி நடந்தது. இன்று காலை 7.25 மணிக்கு கும்பபூஜை, ஹோமங்கள், கணபதி ஹோமம், 10 மணிக்கு பூர்ணாகுதி, 10.30 மணிக்கு மகா அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கல் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 6.30 மணிக்கு 7, 8 வது வடக்குத்தெருக்களில் உற்சவமூர்த்தி தேரில் எழுந்தருளுகிறார். சுற்றுப்பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.ஏற்பாடுகளை விக்ன விநாயகர் கோயில் வழிபாட்டுக்குழுவினர் செய்துள்ளனர்.