காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2013 10:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், இன்று இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். வழக்கம்போல் இந்த ஆண்டு உற்சவம், கடந்த மாதம் 16ம் தேதி துவங்கி, 26ம் தேதி நிறைவு பெற்றது. மறுநாள், 27ம் தேதி காலை விஸ்வரூப தரிசனம், இரவு விடையாற்றி உற்சவம் நடந்தது. அன்று முதல் தினமும், இரவு உற்சவர் காமாட்சியம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடையாற்றி உற்சவம் நிறைவு விழாவான, இன்று இரவு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடைபெற உள்ளது. இரவு 7:00 மணிக்கு, காமாட்சியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.