பதிவு செய்த நாள்
07
மார்
2013
10:03
திருக்கோவிலூர்: பகவான், யோகி ராம்சுரத்குமார் குரு மகராஜின், 12ம் ஆண்டு ஆராதனை இன்று துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. திருவண்ணாமலையில், பகவான் ஆசிரம வளாகத்தில், இன்று காலை, 6:30 மணிக்கு, ஹோமம், அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது. முற்பகல், 11:00 மணிக்கு, பக்தர்கள் பகவானுடன் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மாலை, 4:00 மணிக்கு, சற்குருநாதன் ஓதுவாரின் தேவாரம், திருவாசகம்; 5:45 மணிக்கு புதுச்சேரி ஜோசப், "கீதையின் வழியும், யோகியின் மொழியும் என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். இரண்டாம் நாளான நாளை காலை, 6:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள், பூஜைகள்; காலை, 9:00 மணிக்கு, பூஜ்ய ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில், நாராயண தீர்த்த பூஜை; 11:00 மணிக்கு, பஜனை நடக்கிறது. தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜஸ்டிஸ், டி.எஸ்.அருணாசலத்துடன் கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி; மாலை, 6:00 மணிக்கு, இன்னிசை கச்சேரி; இரவு, 8:00 மணிக்கு, பகவானின் உற்சவ மூத்தியுடன் வெள்ளி ரத ஊர்வலமும் நடக்கிறது.