கீழக்கரை: திருப்புல்லாணி அருகே புல்லாணி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, துவங்குகிறது.திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சியில் உள்ள புல்லாணி அம்மன் கோயிலில், இன்று மாலை அனுக்ஞை, வாஸ்து சாந்தி. பூர்ணாகுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. மார்ச் 18 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை வக்கீல் திருமலை சடகோவன் தலைமையில் ஊராட்சி தலைவர்கள் முனியசாமி(திருப்பல்லாணி), புல்லாணி (தாதனேந்தல்) மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.