பதிவு செய்த நாள்
16
மார்
2013
11:03
வேதாரண்யம்: காசிவிஸ்வநாதர் கோவிலில் திருப்பணி துவக்கவிழா நேற்று நடந்தது. வேதாரண்யம் நாகை ரஸ்தாவில், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், நான்கு வேதங்களால் பூஜிக்கப்பட்ட பெருமையுடைய ஸ்தலமாகும். இக்கோவிலின் குடமுழுக்கு கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. இக்கோவிலில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணி துவக்கவிழா நடந்தது. திருப்பணிகளை சென்னை தியாகராயநகர மகாலட்சுமி டிரஸ்ட் மற்றும் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த உபயதாரர்கள் செய்கின்றனர். இதையொட்டி நேற்று சிறப்பு ஹோமங்கள் நடந்தது. பின்னர் பந்தல்கால் முகூர்த்தமும், திருப்பணி துவக்கமும் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., காமராஜ், நகராட்சி தலைவர் மலர்கொடி, செயல்அலுவலர் ராஜேந்திரன், குருகுல நிர்வாகி வேதரெத்தினம், சென்னை மகாலட்சுமி டிரஸ்ட் நிர்வாகி மகாலெட்சுமி, ஆறுக்காட்டுத்துறை கிராம நாட்டாண்மை சேதுபதி உட்பட பலர் பங்கேற்றனர்.