காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அனேகதங்காபதேஸ்வரர் கோவிலில், நேற்று பாலாலயம் நடந்தது.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் அருகே, அனேகதங்காபதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. சுந்தரர் பாடல் பெற்ற ஸ்தலம். குலோத்துங்க சோழ மன்னரால் கட்டப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 1998ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் தற்போது நன்கொடையாளர்கள், கோவிலை புதுப்பிக்க முன் வந்துள்ளனர். மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு பாலாலயம் நடந்தது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான், நகராட்சி தலைவர் மைதிலி, நகராட்சி இளநிலைப் பொறியாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.