பதிவு செய்த நாள்
16
மார்
2013
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், நேற்று அந்தரித கும்பாபிஷேகம் நடந்தது.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், கொடி மரம் மேற்பகுதி பழுதடைந்து இருந்தது. அதேபோல், பல்லவ கோபுரம் மேற்பகுதியில், கலசம் சேதமடைந்திருந்தது. கொடி மரம், பல்லவ கோபுரம், அதன் கீழ் உள்ள விகடசக்ரவிநாயகர், வள்ளி - தேவசேனா சமேத சண்முக சுவாமி சன்னிதி, ஆகியேவை 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டன.திருப்பணி முடிந்து, நேற்று காலை, 8:00 மணிக்கு, அந்தரித கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் நாளை காலை, பிரம்மோற்சவம் கொடியேற்று விழா நடைபெற உள்ளது.