புதுச்சேரி: வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில் ஒவ்வொரு மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமைகளில் பன்னிரு திருமுறைகளை முழுவதும் ஓதும் முற்றோதல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சபை சார்பில் வேதபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் 5 மணி வரை பன்னிரு திரு முறைகள் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8 மணிக்கு ரிஷப கொடியை சபை உறுப்பினர் குப்புசாமி ஏற்றினார். சபைத் தலைவர் முத்துக்கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை பெருமாள் கோவில் மணியக்காரர் சீனுவாசன் துவக்கி வைத்தார். ஆன்மிக அன்பர்கள் பலர் கலந்து கொண்டு முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினர்.