நிடதநாட்டு சக்கரவர்த்தியான நளன் விதர்ப்ப மன்னன் மகளான தமயந்தியை சுயம்வரத்தின் மூலம் திருமணம் செய்து கொண்டார். அந்த சுயம்வரத்தில் கலந்து கொண்ட தேவர்கள் தமயந்தியை மணம் செய்த நளன் மீது பொறாமை கொண்டனர். தேவர்கள் அனைவரும் நவக் கிரகங்களில் பலம் மிக்க சனிபகவானைச் சந்தித்து நளனைத் துன்புறுத்த வேண்டினர். சனியின் கடுமையான பார்வையால் நளன் சூதாட்டத்தில் ஈடுபட்டு செல்வத்தை இழந்தான். மனைவி மக்களைப் பிரிந்தான். பின், நாரதரின் உபதேசத்தின் படி தீர்த்தயாத்திரை புறப்பட்டான். பலதலங்களுக்கும் சென்ற நளனுக்கு திருநள்ளாற்றில் சனிதோஷம் நீங்கியது. அங்குள்ள தீர்த்தத்தில் நீராடியபோது சனிபகவான் நளனை விட்டு நீங்கினார். அப்போது, நளனே! யாரொருவர் உன் வரலாறைப் படிப்பவர் களுக்கு துன்பம் கொடுக்கமாட்டேன் என்ற வரத்தையும் கொடுத்தார். அஷ்டமத்துச்சனி, கண்டச்சனி, ஏழரைச் சனியால் அவதிப்படுபவர்கள் நள புராணத்தைப் படித்தால் துன்பம் விலகும்.