பதிவு செய்த நாள்
26
மார்
2013
10:03
திருத்துறைப்பூண்டி: திருத்துறை ப்பூண்டி அருகே பொன்னிறை, தகரவெளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமர்சையாக நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்றுக்காலை 5 மணி முதல் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு போட்டு, ஆடு, கோழிகளை பலியிட்டனர். மாலை ஆறு மணிக்கு பால் குடம் எடுத்து தீக்குழியில் இறங்கி, வேண்டுதலை பக்தர்கள் நிறைவேற்றினர். இதில், சுற்றுவட்டார கிராமங்கலிருந்தும், தாலுக்கா முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று, அம்மனை பக்தி பெருக்குடன் வழிபட்டனர். கோவில் அமைந்துள்ள பகுதியை நோக்கி, பக்தர்கள் கூட்டம் குவிந்தவண்ணம் இருந்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காதவாறு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாட்டை திருத்துறைப்பூண்டி போலீஸார் செய்திருந்தினர். மேலும் விழா ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் நீதிமணி, பொன்னிறை, தகரவெளி கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர்.