Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்ணாரியில் இன்று குண்டம் திருவிழா! தகரவெளி புற்றடி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலையில் பங்குனி உத்திர திருவிழா மலை மீது சேவல் கொடியேற்றி விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2013
10:03

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மலை மீது சேவல் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தனர். மலைகளில் தலையாய மலையாக போற்றப்படும் சென்னிமலை கடல் மட்டத்தில் இருந்து, 1,749 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மலை மீது குமரக் கடவுள் பாலதண்டாயுதமூர்த்தம் (சுப்பிரமணிய சுவாமி) கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு தினமும் படி வழியாக முருகப்பெருமானுக்கு எருதுகள் மூலம் திருமஞ்சனம் (தீர்த்த குடம்) கொண்டு செல்வது தனிச்சிறப்பு. இங்கு முருகப்பெருமானுக்கு தைப்பூச தேர், பங்குனி உத்திரத்தேர் என தனித்தனியாக இரண்டு பெரிய தேர் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி உத்திர தேரோட்டம் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி உத்திர விழா நேற்று வழக்கப்படி சென்னிமலை இசை வேளாளர்கள் சமூகத்தை சேர்ந்த நாட்டமை, பெரியதனகாரர்கள், பெரியவர்கள் முன் நின்று மலை மேல் உயரத்தில் உள்ள கொடிமரத்தில் சேவல் கொடியை ஏற்றி உத்திர விழாவை துவக்கி வைத்தனர். கொடியேற்றத்துக்கு முன் முருகன், வள்ளி, தெய்வானை, உற்சவ மூர்த்திகளுக்கும். மூலவர்க்கும் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தலைமை குருக்கள் ராமநாதசிவம் கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்ய, சென்னிமலை இசை வேளாளர்கள் சமூகத்தினர் குலக்கட்டளைபடி சேவல் கொடியை ஏற்றி விழாவை முறைப்படி துவக்கி வைத்தனர். செயல் அலுவலர் தனபாலன், காவேரிரங்கன், இந்திரா டெக்ஸ் மேலாளர் சுகுமார்ரவி, போலீஸ் எஸ்.ஐ., தாமஸ், ஏட்டு ஜீவானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர். முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இன்று (26ம் தேதி) இரவு நடக்கிறது. தேரோட்டம் நாளை (27ம் தேதி) காலை, 6.30 மணிக்கு நடக்கிறது. மாலை, 5 மணிக்கு தேர் நிலை சேரும். 28ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்பத்தேர் உற்சவம் நடக்கிறது. 29ம் தேதி காலை மகாதரிசனம் நடக்கிறது. இரவு மஞ்சள் நீர் நிகழ்ச்சியுடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வில்வமூர்த்தி, செயல் அலுவலர் பசவராஜன் ஆகியோர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 
temple news
காட்பாடி: பொன்னை அருகே, விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் துரைமுருகன், நெற்றியில் வைத்த ... மேலும்
 
temple news
 புவனகிரி: புவனகிரி, பாண்டுரங்கர் பஜனை மடத்தில், சித்தி வினாயகர் மற்றும் சத்தியபாமா, ருக்மணி சமேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar