பதிவு செய்த நாள்
27
மார்
2013
11:03
உடன்குடி: உடன்குடி அருகே கூழையன்குண்டு அல்லி ஊத்து கல்லால் அய்யனார் கோயில் பங்குனி உத்திர விழா இன்று துவங்குகிறது.கூழையன்குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா இன்று (26ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப பூஜையுடன் துவங்குகிறது. காலை 8 மணிக்கு கோயில் இந்து நாடார் உறவு முறை நலச்சங்க தலைவர் ராம்குமார் தலைமையில் குலசேகரன்பட்டணம் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரையில் இருந்து தீர்த்தம் எடுத்துவருதல், காலை 9 மணிக்கு பால்குடம் பவனியும், 10 மணிக்கு வில்லிசையும், 10.30 மணிக்கு மகாகணபதி, வைத்தியலிங்க சுவாமி, கல்லால் அய்யனார், பத்திரகாளி அம்மன், சாஸ்தா, பிள்ளை பெருமாள், முன்னடி முருகர், முத்துப்பேச்சி அம்மன், கருப்ப சித்தர், காலம்மை நாடாச்சி அம்மாள், சுடலைமாடசாமி ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு விசேஷ தீபாராதனையும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு வில்லிசையும், இரவு 10 மணிக்கு வைத்தியலிங்க சுவாமி குடியிருப்பில் இருந்து முளைப்பாரி எடுத்து பத்திரகாளி அம்மன் சன்னதியில் சேர்த்தல், நாளை காலை 10 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மணிக்கு நையாண்டி மேளத்துடன் விசேஷ பூஜையும், பத்திரகாளியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், பகல் 1 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு வில்லிசையும், இரவு 11 மணிக்கு கணியான் கூத்தும், இரவு 12 மணிக்கு சுடலைமாடசுவாமி நடு சாம பூஜையும், சுவாமி பரிவாரங்களுடன் தில்லைவனம் செல்லுதல், வரும் 28ம் தேதி அதிகாலை 2 மணிக்கு காலம்மை நாடாச்சி அம்மனுக்கு திருக்கோயில் வகையறாக்கள் சிறப்பு பொங்கலிட்டு விசேஷ படைப்புகளுடன் அலங்கார பூஜையும், அதிகாலை 6 மணிக்கு சுடலைமாடன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நிறைவு பூஜையும் அதனைத் தொடர்ந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோயில் பரிபாலன சங்க கௌரவ தலைவர் நங்கைநாதன், தலைவர் சீனிவாசகம், துணைத்தலைவர் செல்லப்பாண்டியன், செயலாளர் அருணாச்சலம், பொருளாளர் பால்ராஜ், இணைச் செயலாளர் சௌந்திரபாண்டியன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கல்லால் அய்யனார், திருக்கோயில் இந்து நாடார் உறவின் முறை நலச்சங்க தலைவர் ராம்குமார், செயலாளர் முத்துகனி, பொருளாளர் லிங்கம், துணைத்தலைவர் சந்திரசேகர், துணைச்செயலாளர் ராஜன் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.