பதிவு செய்த நாள்
28
மார்
2013
10:03
அவிநாசி: கருவலூரில் பராசக்தி கோஷத்து டன் பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலான, கருவலூர் மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, புஷ்ப விமான பல்லக்கு, அம்மன் அழைப்பு, திருக்கல்யாணம், யானை வாகன காட்சி ஆகியன நடந்தன. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில், மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் 2.00 மணிக்கு விநாயகர் தேரோட்டம் நடந்தது. மாரியம்மன் தேருக்கு முன், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன; இரு சக்கரங்களிலும், கானூர், காளிபாளையம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர்கள் சன்னை மரம் பிடித்தனர். தாசில்தார் மோகன், டி.எஸ்.பி., ரங்கசாமி, ஊராட்சி தலைவர் அவிநாசியப்பன், ஒன்றிய தலைவி பத்மநந்தினி, அறங்காவலர்கள் அர்ச்சுணன், தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, லோகநாதன் உள்ளிட்ட பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.பக்தர்கள், பராசக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். கோவில் பின்வாசல் அருகே தேர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேரோட்டம் இன்று மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. அவிநாசி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.