திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி தேரோட்டம் மார்ச் 30ல் நடக்கிறது. தேர் வடம் பிடித்து இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி துவங்கியது. இன்றிரவு சூரசம்ஹாரம் லீலை நடக்கிறது.மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் இத்திருவிழா தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் மார்ச் 29 மதியம் 12.45முதல் 1 மணிக்குள் நடக்கிறது. மார்ச் 30ல் தேரோட்டம் நடக்கிறது.
கிராமத்தினருக்கு அழைப்பு: தேரோட்டத்தன்று திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள 43 கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர், வடம் பிடித்து இழுக்க, மலையை சுற்றி தேரோட்டம் நடப்பது வழக்கம். தேர் இழுக்க கிராமத்தினரை அழைக்கும் நிகழ்ச்சி கோயில் முதல் ஸ்தானிக பட்டரான சுவாமிநாதன் தலைமையில் நேற்று துவங்கியது.திருவிழாவின் 10ம்நாள் நிகழ்ச்சியாக இன்றிரவு 8 மணிக்கு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.