கூடலூர்: கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோயில் ஆண்டு திருவிழா ஏப் 5, துவங்கியது. காலை 4:00 மணிக்கு பள்ளி உணர்த்தல்,5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு அபிஷேகம், 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. 8:00 மணிக்கு கலசபூஜை, 11:00 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. மாலை 3:30 மணிக்கு நடை திறப்பு சிறப்பு பூஜையும், 6:30 மணிக்கு தீபாரதனை நடந்தது. 7ம் தேதி 5:00 மணிக்கு மண்வயல் மாதேஸ்வரன் கோயிலிருந்து திருத்தேர் ஊர்வலம் துவங்கி, அம்பலமூலா, வடவயல் வழியாக கோயிலை வந்தடையும். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.