வத்தலக்குண்டு : விராலிப்பட்டி கோட் டை கருப்பணசாமி கோ யில் கடந்த ஜூலையில் அறநிலையத்துறையின் கீழ் வந்தது. இக்கோயில் உண்டியல் திறப்பு நடந்தது. கடந்த நான்கு மாதத்தில் 63 ஆயிரத்து 885 ரூபாய் சேர்ந்துள்ளது கோயில் தக்கார் அறிவழகன், ஆய்வாளர் சொக்கலிங்கம், எழுத்தர் பாஸ்கரன் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். காணிக்கையை கொண்டு கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.