சங்கராபுரம்:சங்கராபுரம் வட்டம் காட்டுவனஞ்சூர் கிராமத்தில் 36ம் ஆண்டு ராமநவமி கற்போத்ஸவ விழா வரும் 12ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. இதையொட்டி 12ம் தேதி அஷ்டபதி மற்றும் திவ்யநாம பஜனை, 13 ம் தேதி திவ்யநாம பஜனை, 14ம் தேதி சீதாகல்யாண வைபவமும் நடக்கிறது. மணலூர்பேட்டை சோமநாத பாகவதர், சென்னை பிச்சுமணி பாகவதர், குப்புராஜ் பாகவதர், கோவை பாலகிருஷ்ண பாகவதர், திருவண்ணாமலை கணேஷ் பாகவத கோஷ்டிகளின் திவ்யநாம பஜனை நடக்கிறது. 15 ம் தேதி ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட்டுவனஞ்சூர் ராம பக்த மண்டலி தலைவர் வெங்கடேச பாகவதர் செய்துவருகிறார்.