செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்று இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடத்தி வருகின்றனர். இந்த மாதம் அமாவாசை இன்றும், நாளையும் (9 மற்றும் 10 ம் தேதி)என இரண்டு நாட்களுக்கு தொடர்கிறது. இதில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்று (9ம் தேதி) இரவு 12 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி தெரிவித்துள்ளார்.