கூடலூர்: கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் திருவிழா சிறப்பாக நடந்தது. கூடலூர் புத்தூர்வயல் மகாவிஷ்ணு கோவில் ஆண்டு திருவிழா கடந்த 5ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை காலை 4:00 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு அபிஷேகம், 6:30 மணிக்கு உஷபூஜை, 8:00 மணிக்கு தாயம்பகா, 11:30 மணிக்கு மதிய பூஜைகள் நடந்தன. மாலை 3:00 மணிக்கு நடைதிறப்பு சிறப்பு பூஜை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மண்வயல் ஸ்ரீ மாதேஸ்வரன் கோவிலிருந்து திருத்தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம் அம்பலமூலா, வடவயல் வழியாக கோவிலை வந்தடைந்தன. தொடர்ந்து, சிறப்பு பூஜையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன.