கோதண்டராமசுவாமி கோயிலில் பிரம்மோற்சசவவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2013 11:04
ராஜபாளையம்: சிங்கராஜாகோட்டை கோதண்டராமசுவாமி கோயிலில் பங்குனி பிரம்மோற்சவவிழா கொடியேற்றம் நேற்று காலை 11.45 மணிக்கு நடந்தது. தேவநாதன் பட்டர், மணி பட்டர், கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் ராஜன் வேதபாரயணம் செய்தனர். பத்து நாள் நடைபெற உள்ள விழாவில், தினமும் இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வாகனங்களில் வீதிஉலா நடக்கும். ஏப். 15ல் திருக்கல்யாணம், ஏப். 19ல் ராமநவமியுடன் விழா முடிகிறது. ஏற்பாடுகளை, சிங்கராஜாகோட்டை தலைவர் ராம்சிங் ராஜா, கோயில் தர்மகர்த்தா ஸ்ரீனிவாசராஜா மற்றும் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.