பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
திருநெல்வேலி: திருநெல்வேலியில், ஆன்மிக உபன்யாசகர் திருச்சி கல்யாணராமன் ஏப்., 14 துவங்கி, அடுத்த ஆண்டு ஏப்., 14 வரை, கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். கம்பராமாயணத்தில், 11660 பாடல்களுக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் சொற்பொழிவு நடக்கிறது. கம்பராமாயணம் பங்குனி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் அரங்கேறியது. இங்கு, பங்குனி அஸ்தம் நட்சத்திரத்தில் முடியும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏழு ஆண்டுகள் தொடர்சொற்பொழிவை, மயிலாடுதுறை அருகில் உள்ள தேதியூர் சுப்பிரமணியசுவாமி சாஸ்திரிகள் நிகழ்த்தினார். மதுரையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவர், வால்மீகி ராமாயணத்தின் ஸ்லோகங்கள் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார். இதுவே மிகப்பெரிய சாதனை. அதன் பின், நீண்ட கால சொற்பொழிவுகள் இடம் பெறவில்லை. ""உலக அமைதி, மழை வளம், தொழில் அபிவிருத்தி, தம்பதி ஒற்றுமை, இளைஞர்களிடம் பக்தியுணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக, ராமன் நாமம், தாமிரபரணி கரையில் ஒலிக்க உள்ளது, என, கல்யாணராமன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி மீனாட்சிபுரம் அருகிலுள்ள சந்நியாசி கிராமம், விவேக சம்வர்த்தினி சபாவில், மாலை 6முதல் இரவு 8 வரை நடக்கும்.