பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
திருப்போரூர்: திருப்போரூரில், சித்திரை பிறப்பு திருப்படித் திருவிழா, வரும், 13ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.திருப்போரூரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் தேதி, திருப்படித் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு விழா வரும், 13ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலை, 8:00 மணியிலிருந்து, பல்வேறு திருச்சபையினர் பால்குடங்களுடன் ஊர்வலம் வந்து, கந்தனுக்கு அபிஷேகம் செய்வர். திருப்போரூர் மாடவீதிகளில் உள்ள சத்திரங்களில், நாள் முழுவதும் அன்னதானம், இரவு விடிய விடிய, பக்தி இன்னிசை கச்சேரிகள் நடைபெறும்.இரவு, 12:00 மணிக்கு, கைலாசநாதர் கோவிலில், பஜனைப் பாடல்களுடன் படி பூஜை வெகு சிறப்பாக நடைபெறும். மறுநாள் காலை, 5:00 மணிக்கு, மூலவர் கந்தபெருமான் விசு தரிசனமாக பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை, திருப்போரூர் கந்த சுவாமி கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.