பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டை மனூர்குல தெலுங்கு தேவாங்கர் சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஏப்ரல், 11ல் யுகாதி பண்டிகை நடக்கிறது. ஏப்ரல்,11ம் தேதி காலையில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து சக்தி அலங்காரம், சக்தி எடுத்தல், பூணூல் அணிதல் ஆகியன நடக்கிறது. மேலும், திருமஞ்சனம், வீரகுமாரர்களின் கத்தி போடும் அலகு சேவையுடன் கூடிய ஊர்வலம் நடக்கிறது. 108 கன்னிகாஸ்திரிகள் பால்குடம் எடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன், மாரியம்மன், பொன்கணபதி கோவில நிர்வாகி நாகராசன் தலைமையில், விழாக்குழுவினர் செய்கின்றனர்.