சித்திரை திருநாளை முன்னிட்டு குற்றாலத்தில் திருதேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2013 11:04
குற்றாலம்: சித்திரை திருநாளை முன்னிட்டு குற்றாலத்தில் திருதேரோட்டம் நடந்தது. குற்றாலத்தில் சித்திரை திருநாள் கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமிகள் வெள்ளி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். விழாவில் நேற்று முன்தினம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று திருதேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர்களை ஓம் நமச்சிவாயா கோஷம் முழங்கிட தேர் இழுத்தனர். தொடர்ந்து நாளை நடராஜர் தாண்டவதீபாராதனையும், 12ம் தேதி சித்திரை சபையில் நடராஜருக்கு பச்சைசாத்தி தாண்டவதீபாராதனை நடக்கிறது. 14ம் தேதி சித்திரை விசு நடைபெறுகிறது.