நாகர்கோவில்: மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் 21ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். கேரளாவில் பிறந்து உலகம் முழுவதும் பக்தர்களை கொண்டு ஆன்மிக பணியாற்றுபவர் மாதா அமிர்தானந்தமயி. உலகம் முழுவதும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டபோதெல்லாம் மாதா அமிர்தானந்மயி மடம் ஆற்றிய பணிகள் அளப்பரியவை. கடந்த 40 ஆண்டுகளாக அமிர்தானந்தமயி ஜாதி, மத, இன வேறுபாடுகளை கடந்து சுமார் 4 கோடி மக்களுக்கு தரிசனம் தந்துள்ளார். அவரது சேவை பணிகளை பாராட்டி ஐக்கியநாடுகள் சபை அமிர்தானந்தமயி மடத்தை சர்வதேச தொண்டு நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் 21ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அன்றைய தினம் மாலை 6.30 மணி முதல் கன்னியாகுமரி சரவணந்தேரி அமிர்த வித்யாலயம் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை, வரவேற்பு, அறிமுகம், அமிர்தானந்தமயி தேவியின் சத்சங்கம், பஜனை, அமிர்தானந்தமயியின் வழிகாட்டுதலில் தியானம், ஆசி மற்றும் தரிசனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாதா அமிர்தானந்த மயி வா சமிதி செய்து வருகிறது.