பதிவு செய்த நாள்
10
ஏப்
2013
11:04
திருநெல்வேலி: தச்சநல்லூர் நெல்லையப்பர் கோயிலில் சித்திரைத்திருவிழா இன்று (10ம் தேதி) துவங்குகிறது. கோயிலில் நேற்று காலை கணபதி ஹோமம், மங்கள இசை, இரவு விநாயகர் வீதியுலா, உலகம்மன் கோயிலில் கிராம தேவதை வழிபாடு நடந்தது. முதல் திருநாளான இன்று காலை 7.45 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் கோயிலில் கொடியேற்றம் நடக்கிறது. மொத்தம் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, இரவு சப்பர வீதியுலா, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏழாம் திருநாள் இரவு 9 மணிக்கு நடராஜர் சிவப்புசாத்தி சப்பரம், சுவாமி, அம்பாள் வீதியுலா, எட்டாம் திருநாள் காலை 6 மணிக்கு நடராஜர் வெள்ளை சாத்தி சப்பர வீதியுலா, 9 மணிக்கு நடராஜர் பச்சைசாத்தி சப்பர வீதியுலா, மதியம் 12 மணிக்கு பரிவேட்டை, மாலை 4 மணிக்கு மேல் கங்காளநாதர் சப்பர வீதியுலா, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேர் கடாட்சம் நடக்கிறது.
18ம் தேதி வருஷாபிஷேகம்: 9ம் திருநாள் 18ம் தேதி காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் வருஷாபிஷேகம் நடக்கிறது. 9.50 மணிக்கு மேல் 10.10 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளுகின்றனர். 10.20க்கு மேல் 10.50 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. சுற்றுப்பகுதி மக்கள் தேர் இழுக்கின்றனர். மதியம் ஒரு மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடக்கிறது. 10ம் திருநாள் காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல், இரவு 8 மணிக்கு பைரவர் பூஜை நடக்கிறது.