செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவச அலங்காரம் செய்தனர். பிற்பகலில் அம்மன் திருவிளையாடல்கள் சிறப்பு சொற்பொழிவும், பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும் நடந்தன. மாலை 6 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் 81 பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் கோவில் உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு தலைவர் சின்னதம்பி, மேலா ளர் முனியப்பன், அறங்காவலர்கள் ஏழுமலை, பெருமாள், காசி, சரவணன், வடிவேல், சேகர் கலந்து கொண்டனர்.