மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே சாமிநாதபுரம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீரமாத்தியம்மன் கோவில் 40 வது ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றங்கரையில் வீரமாத்தியம்மன் கோவில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் 40 ஆண்டுகளாக சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கடந்த 14ம் தேதி கோவிலில் மகா உற்சவ பெருவிழாவும், லட்சார்ச்சனையும் நடந்தது. காலை 7.00 மணிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், காலை11.00 மணிக்கு அம்மனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு வழிபாடும் நடந்தது.