கீழ்க்குடி கோயில் பூக்குழி திருவிழா ஒற்றுமையாக கொண்டாட அறிவுரை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2013 12:04
திருவாடானை: கீழ்க்குடியில் சிவசூரியபெருமாள் கோயிலில், இரு தரப்பினரும் ஒற்றுமையாக விழா நடத்த வேண்டும் என ஆர்.டி.ஓ. முன்னிலையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.திருவாடானை அருகே கீழ்க்குடியில் சிவசூரிய பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் முதல்மரியாதை மற்றும் வரவு, செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதனால் 3 ஆண்டுகளாக பல பிரச்னைகள் ஏற்பட்டு விழா நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இந்தாண்டு விழா, நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஏப்.,24ல் கலைநிகழ்ச்சி, 25ல் பூக்குழி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. லாரன்ஸ் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது. இரு தரப்பினரும் ஒற்றுமையாக விழாவை நடத்தவேண்டும். போலீஸ் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபடும் என்று அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.