பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸர் கோவிலில் சித்திரை திருவிழாவில், வர்த்தகர் சங்கம் சார்பில், நடந்த மண்டகப்படியில் பூதவாகனத்தில் ஸ்வாமி பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருத்துறைப்பூண்டியின் நகரின் மத்தியில் அமைந்துள்ள பிறவி மருந்தீஸர் ஸ்வாமி கோவிலில் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. இதில், 13ம் நாளாக நேற்றுக்காலை ஸ்வாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாலை சந்தனகாப்பு அலங்காரத்தில், ஸ்வாமியும், அம்பாளும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு பூத வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் நடந்த விழாவில், வர்த்தகர் சங்கத்தலைவர் செந்தில்நாதன் தலைமையில் திண்டுக்கல் அங்கிங்கு இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மண்டகப்படி நிகழ்ச்சியில் பூதவாகனத்தில் ஸ்வாமி பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதியுலாவும் நடந்தது. இதில், வர்த்தகர் சங்க செயலாளர் கணபதி பங்கேற்றேர்.