பதிவு செய்த நாள்
19
ஏப்
2013
12:04
சேலம்: சேலம், ராஜகணபதி கோவில் உண்டியல் நேற்று எண்ணப்பட்டது. இதில், 11 லட்சத்து, 15 ஆயிரத்து, 614 ரூபாய் கிடைத்துள்ளது. சேலம், கடைவீதியில், ராஜகணபதி கோவிலில் உள்ள மூன்று உண்டியல் எண்ணும் பணி நேற்று, சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் நடந்தது. இந்து அறநிலையத்துறை சேலம் உதவி ஆணையாளர் ராமு, சுகவனேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, கண்காணிப்பாளர் இந்திரா, சரக ஆய்வாளர் உமாதேவி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் பாங்க் ஆஃப் இந்தியா பணியாளர்கள் மூலம் எண்ணப்பட்டது. இதில், 11 லட்சத்து, 15 ஆயிரத்து, 614 ரூபாயும், 138 கிராம் வெள்ளியும், அமெரிக்க டாலர் நான்கு நோட்டுகளாக, 102 டாலர், 10 அரபு ரியால் நோட்டு ஒன்று உள்ளிட்டவை உண்டியலில் கிடைத்தன. இதற்கு முன் கடந்த ஃபிப்ரவரி, 6ம் தேதி இக்கோவில் உண்டியல் எண்ணப்பட்டது. கடந்த முறையை விட இம்முறை, ஒரு லட்சத்து, 35 ஆயிரம் ரூபாய் அதிகமாக இருந்தது.