Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்தமர் கோவிலில் சித்திரை திருவிழா புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2013
12:04

திருநெல்வேலி: தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவில் 9வது நாளான நேற்று காலை 5 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு திருத்தேர், பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நமச்சிவாய கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளிலும் வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை, தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது. இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (19ம் தேதி) காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பைரவர் பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar