பதிவு செய்த நாள்
24
ஏப்
2013
11:04
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி @காவிலில், பிரம்மோற்சவ விழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதூரில் மிகவும் பழமையான, ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, இன்று கொடி÷யற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு, ஆதிகேசவ பெருமாள் கேடய வாகனத்தில் எழுந்தருளி, ராஜ வீதியில் வீதி உலா வருவார். அதன்பின், ஆதிகேசவ பெருமாள் உற்சவ மூர்த்தி கொடி மரத்தின் முன் எழுந்தருள்வார். காலை 9:15 மணியில் இருந்து, 10:45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, மாலை, ஆதிகேசவ பெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.