முன்னோர் வாழும் உலகம் தெற்கு திசையில் இருப்பதாக கூறுவர். அதனால் அவர்களுக்கு தென்புலத்தார் என்ற பெயருண்டு. மனிதனுக்குரிய கடமைகளில் முன்னோர் வழிபாடே முதல் கடமை என திருக்குறளில் திருவள்ளுவர் குறிப்பிட்டு உள்ளார். முன்னோர் வழிபாட்டுக்குரிய நாள் அமாவாசை. அதிலும், தட்சிணாயன புண்ணிய காலமான ஆடியில் வரும் அமாவாசை சிறப்பிடம் பெறுகிறது. இந்நாளில் ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடிக்கரை, கன்னியாகுமரி, பாபநாசம், செதலபதி போன்ற திருத்தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்து வழிபாடு மேற்கொள்வது சிறப்பாகும்.