சந்தான வேணுகோபாலபுரம்: சந்தான வேணுகோபால சுவாமி சித்திரை பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆர்.கே.பேட்டை அடுத்து உள்ளது சந்தான வேணுகோபாலபுரம் கிராமம். இங்கு, 500 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. விருஷா பசலம் பர்வதமலை அடிவாரத்தில் கோவில் அமைந்துள்ளது. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் உபகோவிலான இக்கோவிலில், நேற்று கொடியேற்றத்துடன் சித்திரை பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து மே மாதம், 2ம் தேதி வரை. 10 நாட்கள் விழா நடைபெறும். நேற்று காலை துவஜாரோகணம் நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு ருக்மணி, சத்யபாபா சமேத சந்தான வேணுகோபாலசுவாமி அம்ச வாகனத்தில் எழுந்தருளினார். வரும் மே, 1ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது.