கரூர்: கரூர் அபயபிரதான ரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில், நடந்த திருக்கல்யாண உற்வசத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். பிரசித்தி பெற்ற கரூர் அபயபிரதான ஸ்வாமி கோவி லில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு, கடந்த, 17 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங் கியது. இதை தொடர்ந்து நாள்தோறும், பல்வேறு வாகனங் களில் ஸ்வாமியின், திருவீதி உலா நடந்தது.நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு ஸ்வாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி வழிப்பட்டனர். மஹா தீபராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அமராவதி ஆற்றில் தீர்த்த வாரியும், 28 ம்தேதி ஊஞ்சல் உற்வசம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகளை, உதவி ஆணையர்கள் ரத்தின வேல் பாண்டியன், முல்லை ஆகியோர் செய்து வருகின்றனர்.