வால்பாறை: வால்பாறை காமராஜ்நகர் சக்திமாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.வால்பாறை டவுன் காமராஜ்நகர் ஸ்ரீசக்திமாரியம்மன் கோவிலின் 33ம் ஆண்டு திருவிழாவும், ஸ்ரீமுனீஸ்வரன் கோவிலின் 14ம் ஆண்டு திருவிழாவும் கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு 9.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி அழைத்து வரப்பட்டது. நேற்று காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் 5ம் தேதி வரை நடைபெறும் திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.