தென்காசி: தென்காசி வடக்கத்தி அம்மன் கோயிலில் இன்று (29ம் தேதி) கொடை விழா துவங்குகிறது.தென்காசி எல்.ஆர்.எஸ். பாளையம் வடக்கத்தி அம்மன் கோயில் கொடைவிழா இன்று (29ம்தேதி) தொடங்குகிறது. காலையில் அம்மனுக்கு மாக்காப்பு விழாவும், மாலை 6 மணிக்கு நையாண்டி மேளத்துடன் சிற்றாற்றிலிருந்து சக்தி கிரகம் எடுத்து வருதல், இரவு 8 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு அலங்கார பூஜையும், தீபாராதனையும், இரவு 9 மணிக்கு வில்லிசையும் நடக்கிறது.நாளை 30ம் தேதி அம்மன் கொடைவிழாவும், காலை 8 மணிக்கு அர‹ர் நங்கையம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வீதிஉலா வருதலும், காலை 9மணிக்கு வில்லிசையும், மதியம் 12 மணிக்கு அம்மன் உச்சிகால பூஜையும், மாலை 4 மணிக்கு பொங்கலிடும் வைபவமும், மாலை 6.30 மணிக்கு அம்மன் அலங்கார பூஜையும், தீபாராதனையும், இரவு 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் மே.1ம் தேதி காலை 10 மணிக்கு அம்மன் தீபாராதனையும் இதனைத்தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.ஏற்பாடுகளை கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.