பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
11:04
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த கீழ்சேவூர் ஈஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம் தேதி) நடக்கிறது.கீழ்சேவூர் கிராமத்தில் உள்ள கோகிலாம்பாள் சமேத ஜம்பு நாத ஈஸ்வரர் கோவில் இந்து அறநிலையத் துறை உதவியுடனும், பொது மக்கள் பங்களிப்புடன் புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (1ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், தன பூஜை நடந்தன. மாலை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால வேள்வி ஆகியவை நடந்தன. நாளை (30ம் தேதி) காலை 9:45 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்படுதல் நடக்கிறது. தொடர்ந்து 10:00 மணிக்கு அனைத்து விமானங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மூல ஸ்தாபனம், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7: 00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது.