பதிவு செய்த நாள்
30
ஏப்
2013
11:04
விழுப்புரம்: கூவாகம் நவரத்னா சிட்டியில் அமைந்துள்ள ஜெயமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. விழாவையொட்டி நாளை (1ம் தேதி) காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சுமங்கலி பூஜை, 108 மூலிகை யாகவேள்வி, நாடிசந்தானம், தத்வார்ச்சனை, யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து 9 மணிக்கு மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானமும், வரும் 2ம்தேதி மண்டல பூஜைகளும் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் மோகன், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் லட்சுமணன், எம்.பி., ஆனந்தன், எம்.எல்.ஏ., குமரகுரு, ஜெ., பேரவை செயலாளர்கள் ஞானமூர்த்தி, ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் ராமலிங்கம், தட்சணாமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.