ஆனைமலை: ஆனைமலை சுப்பேகவுண்டன்புதூர் மதுரை வீரன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் முதலாம் ஆண்டுவிழா கடந்த 30ம் தேதி துவங்கியது. துவங்கிய நாளில் சேத்துமடை தெய்வகாளியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. 1ம் தேதி கும்பஸ்தாபனமும், அம்மன் திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று காலை 9.00 மணிக்கு ஆற்று விநாயகர் கோவிலில் இருந்து 27 பூவோடுகளில் பூ (தீ) வளர்க்கப்பட்டது. 12 பக்தர்களுக்கு அழகு குத்தப்பட்டது. மேளதாளங்கள் முழங்க பூவோடு மதுரை வீரன் கோவில் வரை எடுத்துச்செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.