பதிவு செய்த நாள்
14
மே
2013
10:05
பழநி:கோடை விடுமுறையால் பழநியில் பல்வேறு மாநில, மாவட்ட பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நாள்தோறும் நுற்றுக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, மயில்பிலீகாவடி, தீர்த்தகாவடிகளுடன் வந்த வண்ணம் உள்ளனர்.கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு கூட்டம் கூட்டமாக, மலைக்கோயிலுக்கு வருகின்றனர். பங்குனி உத்திரம் முடிந்தநிலையிலும், கோடை விடுமுறையை முன்னிட்டு, சேலம்,நாமக்கல், திருப்பூர் போன்ற மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரையாக தீர்த்தகாவடிகள், பால்குடம், மயில்பீலிகாவடிகளுடன் வந்து, நேர்த்திகடன் செலுத்திய வண்ணம் உள்ளனர்.