பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மே 24 ம் தேதி வரை வைகாசி வசந்த உற்சவம் நடக்கிறது.நேற்று முதல் 9ம் நாள் விழா வரை, பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணிக்கு கோயிலிலிருந்து அம்மன், சுவாமி புது மண்டபம் சென்று, அங்கு பக்தியுலாத்துதல், தீபாராதனை நடக்கும். பின் அங்கிருந்து எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகள் சுற்றி, கோயில் சேத்தியாகும். பத்தாம் நாள் காலையில் புது மண்டபம் எழுந்தருளி, பகலில் தங்கி, மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேரும்.விழா நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயதாரர்கள் சார்பாகவோ உபய தங்கரதம், உபய கல்யாணம் நிகழ்ச்சிகள் நடக்காது, என இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.