பதிவு செய்த நாள்
17
மே
2013
10:05
ஓசூர்: ஓசூர், முல்லைநகர் சங்கடஹர விநாயகர், காயத்ரி தேவி, கல்யாண சுப்பிரமணியர் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 13ம் தேதி முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீபராதனைகள், பிரசாதம் வழங்குதல் நடந்தது. தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், மஹா கணபதி ஹோமம், ரக்ஷா பந்தனம், சரஸ்வதி ஹோமம் ஆகியவை நடந்தது. கடந்த,14ம் தேதி வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பஸ்தாபனம், யாகசாலை ப்ரவேஷம், வேதிகார்ச்சனை, துவாரபூஜை, தீபாராதனையும், 14ம் தேதி ஆன்மிக இன்னிசை சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் கால யாக பூஜை, விஷேச சந்திபூஜை, காயத்திரி தேவி வேத பாராயணம், பூர்ணா ஹூதி உபச்சாரம், தீபாராதனை ஆகியவை நடந்தது. மாலை, 4 மணிக்கு ஸ்வாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. மாலை, 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும், நேற்று காலை, 10 மணிக்கு சங்கட ஹர விநாயகர், காயத்திரி தேவி, கல்யாண சுப்ரமணியர், நவக்கிரஹக மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. பாப்பாரப்பட்டி, சோமேஸ்வரர் கோவில் தீட்ஷிதர் தியாகராஜ், கோபுர கலசங்கள் மீது புனி நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார்.