Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்: விரதமுறையும் பலனும்! திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்! திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று வைகாசி விசாகம்: வள்ளி மணாளா வருக! வளமான வாழ்வை தருக!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 மே
2013
10:05

வைகாசி விசாகமான இன்று முருகப்பெருமானை, இந்த ஸ்லோகம் சொல்லி வழிபடுவோமே!த உள்ளம் அமரும் உத்தமனே! அருணகிரிக்கு அருளிய முருகனே! ஆறுபடை அமர்ந்தவனே! பழநியில் வாழும் பாலகுமாரனே! சிக்கல் சிங்காரவேலனே! செந்தில் ஆண்டவனே! தந்தைக்கு பாடம் சொன்ன தனயனே! மயிலேறிய மாணிக்கமே! எமக்கு நல்வாழ்வு தந்தருள்வாயாக.

வடபழநியாண்டவனே! வல்வினை தீர்ப்பவனே! வயலூர் வாழ் வள்ளலே!
செங்கோட்டு வேலவனே! தணிகைநாதனே! வள்ளி மணாளனே!
திருப்பரங்குன்றம் வாழ் நாதனே!
சுப்பிரமணியனே! தேவசேனாபதியாக விளங்குபவனே! உன்னருளால் எங்கள் வாழ்வு மலரட்டும்.

குன்றுதோறும் எழுந்தருளிய குமரக் கடவுளே! ஆவினன்குடிவாழ் அமுதனே! ஆதிபரஞ்சுடராம் சிவனின் நெற்றிக் கண்ணில் உதித்தவனே!
ஆனைமுகன் தம்பியே! முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவனே! சூரசம்ஹாரனே! பால தண்டாயுதபாணியே! எமக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியம் தந்தருள வேண்டும்.

பார்வதி பெற்றெடுத்த பாலகனே!
தெய்வானையின் உள்ளம் கவர்ந்தவனே! சேவல் கொடியானே! மரகதமயிலில் உலகை வலம் வந்தவனே! வேலாயுதமூர்த்தியே! சரணவபவனே! சண்முகனே! சூரனுக்கு பெருவாழ்வு தந்தவனே! எமக்கு வளமான வாழ்வு தர வேண்டும்.

செந்தூர் கந்தனே! சுவாமிநாதனே!
சென்னிமலை சேவகனே! அவ்வைக்கு கனி அளித்த சுப்பிரமணியனே!
மால் மருகா! கார்த்திகேயனே!
விசாகத்தில் அவதரித்த வித்தகனே!
சரணடைந்தவரைக் காக்கும் தயாபரனே! சித்தநாதனே! எம்மைக் காக்க சீக்கிரம் வந்தருள்க.

தஞ்சமென வந்தவரைத் தாங்குபவனே!
அபயம் அளித்திடும் அம்பிகை புதல்வனே! கதிர்காமம் அமர்ந்தவனே! பன்னிருகையனே! பாமரர் போற்றும் பரம்பொருளே! காங்கேயனே! கடம்பனே! குறிஞ்சி நாதனே!
உம் பன்னிரு கண்களால் எங்கள் மீது கருணை மழை பொழிவாயாக!

குமரப்பெருமானே! திருப்புகழ் போற்றும் திருமுருகா! பிரணவ மந்திரத்தை உபதேசித்தவனே! அருணாசலத்தில் உறையும் கம்பத்து இளையவனே!
முருகம்மையாரைக் காத்தவனே! முக்திக்கு வித்தே! தமிழ்த்தெய்வமே!
உன்னருளால் இந்த வையம் வாழ்வாங்கு வாழட்டும்.

வைகாசி விசாகம் கொண்டாட்டம் ஏன்?: வைகாசி மாத பவுர்ணமியன்று, சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இந்நாள் முருகனின் பிறந்தநாள் ஆகிறது. "விசாகன் என்றால் "குமரன், இளைஞன் என்ற பொருள்கள் உண்டு. முருகன் என்றும் இளையவன் என்பதால், விசாகம் நட்சத்திரம் அவருக்குரியது ஆயிற்று. பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகனிடத்தில் காணலாம். இந்நாளில் முருகன் தலங்களில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அபிஷேகம் செய்வர்.

சரவணபவ மந்திரம்: முருகனுக்கு எத்தனையோ திருநாமங்கள் உண்டு. இதில் சிறப்பு மிக்க மந்திரமாக "சரவணபவ அமைந்துள்ளது. இதனை மனமுருகிச் சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி(பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. "சரவணன் என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன் என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப்பொய்கை என்று சொல்வர்.

வந்தான் வடிவேலன்: திருவண்ணாமலையில் வசித்த அருணகிரிநாதரின் பக்தியையும், பாடல் திறனையும் கண்டு, சம்பந்தாண்டன் என்ற புலவர் பொறாமை கொண்டார். இதையடுத்து பிரபுட தேவன் என்ற மன்னன் முன்னிலையில் இருவரில் யாருடைய பக்தி சிறந்தது என்ற போட்டி நடந்தது. முருகனைப் பாடி வரவழைக்க முயன்றார் அருணகிரிநாதர். ஆனால், சம்பந்தாண்டான் முருகனின் திருக்காட்சி கிடைக்காதபடி மந்திரங்களை ஜபித்தான். ஆனால், மந்திரங்களை முறியடித்த முருகப்பெருமான், கோயிலிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் இடதுபுறமுள்ள கம்பத்தில் காட்சி தந்தார். கம்பத்தில் காட்சி தந்ததால், "கம்பத்து இளையனார் என்ற பெயர் பெற்றார். இதனை அருணகிரிநாதர் திருப்புகழில் ""அருணையில் ஒரு நொடிதனில் வரும் மயில்வீரா என்று குறிப்பிடுகிறார்.

திருச்செந்தூரில் நீராடும் முறை: வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் திருச்செந்தூர். இந்த ஊரில் இருந்த சூரனை சம்ஹாரம் செய்யத்தான் முருகன் அவதாரமே நிகழ்ந்தது. இங்கு பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு அடுத்து நாழிக்கிணற்றில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது சரியான நடைமுறை அல்ல. கடலில் குளித்த உப்புத்தண்ணீரைக் கழுவுவதற்காக நாழிக்கிணறில் குளிப்பதாக கருத்து கொண்டுள்ளனர். முருகப்பெருமான் பத்மாசுரனை அழிக்க லட்சம் வீரர்களுடன் சென்றார். அவர்களின் தாகம் தீர்க்க தன் வேல் கொண்டு எறிந்து கடற்கரையிலேயே அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் நல்ல தண்ணீர் உள்ள நாழிக்கிணறை உருவாக்கினார். முருகன் உருவாக்கிய அந்த நாழிக்கிணறில் தான் அனைவரும் முதலில் நீராடவேண்டும். பிறகு கடலுக்குச் சென்று கூச்சலிடாமல், பக்தியுடனும், கவனமாகவும் குளிக்க வேண்டும். கடலில் சென்று குளித்த பிறகு அறைகளில் சென்று குளித்து, பெற்ற புண்ணியத்தைக் குறைத்துக் கொள்ளக்கூடாது.

விசாக நட்சத்திரக் கோயில்: திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகிலுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் ( 12 கி.மீ.,) விசாக நட்சத்திரத்தில் பிறந்தோருக்கான திருத்தலம். விசாக நட்சத்திரம் விமலசாகம், விபவசாகம், விபுலசாகம் என்று மூன்று வகையான ஒளிக்கிரணங்களை உடையது. இந்த கிரணங்கள் இம்மலையில் படுவதால், இந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் அவசியம் இந்த கோயிலைத் தரிசிக்க வேண்டும். 500 அடி உயரத்தில், 544 படிகளுடன் அமைந்த குன்றுக்கோயில். படியேற முடியாதவர்கள் வாகனத்தில் மலைக்குச் செல்லலாம். விசாகம், கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்கள் முருகனுக்கு உகந்தவை. முற்காலத்தில் இந்த நட்சத்திர நாட்களில் இம்மலையில் தங்களது முழு ஆதிக்கத்தையும் வெளிப்படுத்தும் ஓட வள்ளி, நளமூலிகை, திருலைச்செடி ஆகிய மூலிகைகள் வளர்ந்தன. செல்வ விருத்திக்காக திருலைச் செடியின் வேரையும், தனகர்ஷண யந்திரத்தையும் சேர்த்து, முருகனுக்கு பூஜித்தார்கள். இத்தல முருகனை தன் மகனாக ஏற்றுக் கொண்ட சிவகாமி பரதேசி அம்மையார் என்பவர், மலையடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் கற்களை வைத்து இழுத்துச் சென்று மலையுச்சியில் மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar