செல்வவளம் அருளும் மகாலட்சுமீஸ்வரர் மயிலாடுதுறை அருகில்உள்ள திருநின்றியூரில் அருள்புரிகிறார். இங்கு திருமகள் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டதாக தலவரலாறு கூறுகிறது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் பார்த்தபடி காட்சி தருகின்றனர். கோள்சாரத்தில் சூரியனும் சந்திரனும் நேருக்குநேர் சந்திக்கும் நாள் அமாவாசை. இத்தலத்தில் எப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் நித்ய அமாவாசைத்தலம் எனப்படுகிறது. அமாவாசையன்று முன்னோரின் ஆத்மசாந்திக்காக வேண்டிக் கொள்கின்றனர். வரும் 30ம் தேதி நிகழும் ஆடி அமாவாசையன்று இங்கு சென்று வரலாம். மகாலட்சுமீஸ்வரரை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.