Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீட்டு மாடிகளில் ஹோமம் நடத்தலாமா? மூன்று சக்திகள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை செய்ய நேரம் காலம் எதற்கு?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2013
12:05

இறைவனை உணர்வதன் மூலமும், காண்பதன் மூலமும் அல்லது இரண்டின் மூலமாகவும் தெய்வ அருளைப் பெறலாம்.

மகத்தான ஓர் முடிவைக் காணும் போது, அங்கே மகத்தான செயலின் ஆரம்பமும் ஏற்பட போகிறது என்பதை உறுதியாக நம்பு. துன்பம் நிறைந்த அழிவு மனதை அச்சுறுத்தும் போது, ஒரு பெரிய மகத்தான செயல் நிச்சயமாக வரவிருக்கிறது என ஆறுதல் கொள்ள வேண்டும்.

நினைப்பில் உண்மையும், சொல்லில் உண்மையும் இருக்க வேண்டும். பொய் உனது ஜீவனின் இயல்பானதல்ல. அது வெளியிலிருந்து வருகிறது என்பதை உணரும் போது அதை மறுத்து ஒதுக்குவது எளிதாகும்.

உலகில் உள்ள எவற்றின் மீதும் நமக்கு ஆசை தேவையில்லை, குறிப்பாக செல்வம், வறுமை, மகிழ்ச்சி, துன்பம், வாழ்வு, சாவு, பெருமை, சிறுமை, அறம், நண்பன், மனைவி, குழந்தைகள், நாடு, நமது வேலை, சொர்க்கம், பூமி இவற்றில் உள்ள அல்லது இவற்றைக் கடந்த எதிலும் நமக்கு ஆசை வேண்டியதில்லை.

கடவுளை மட்டும் நேசிப்பதால், அவரும் பிறரை நேசிக்காமல் உன்னை மட்டும் நேசிக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், இது நேர்மையற்ற, இயற்கைக்குப் புறம்பான ஆசையாகும். காரணம் கடவுள் ஒருவர் தான், நீயோ பலரில் ஒருவன்.

இரவில் கண் விழிப்பது சரியான அணுகு முறையல்ல, தேவையான உறக்கத்தைத் தடுத்தால் உடம்பைத் தாமசமாக்கி, விழிப்பு நேரத்தில் செயல் திறனை குறைத்து தடுமாற்றத்தை ஏற்படுத்தும்.

நீ எதை வேண்டுகிறாய் என்பதைத் தூர வைத்துவிட்டு இறைவன் எதை வேண்டுகிறான் என்பதை நீ அறிய விரும்ப வேண்டும்.

உள்ளம், வேக உணர்ச்சிகள், வழக்கமான கருத்துக்கள்ஆகியவை சரியானது என்று நம்பக்கூடாது. கீதையில் அர்ஜூனன் செய்தது போல அவற்றைத் தாண்டிச் சென்று, சரியானவை, தேவையானவை என்று இறைவன் நிர்ணயித்துஇருப்பதைப் புரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்.

ஆன்மிகத்தில் ஈடுபடுபவரின் உயிரையும், உடலையும் காமச் செயலில் இருந்து காக்க தவறினால், இறைவன் அருள் கிடைக்காமலும், ஆன்மிக இன்பம் பெற வழியில்லாமலும் போய்விடும். எனவே வாழ்க்கையில் தூய்மையான இன்பத்தை அறியும் போது இறைவனையும் அறிய வாய்ப்பு கிடைக்கும்.

-கேட்கிறார் அரவிந்தர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar